முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண் முன்னேற்றத்திற்காக பணியாற்றிய நபர்களுக்கு அவ்வையார் விருது..! தமிழக அரசு அறிவிப்பு

The Tamil Nadu government will present the Avvaiyar Award to those who have rendered outstanding service for the advancement of women.
07:30 AM Dec 02, 2024 IST | Vignesh
Advertisement

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கும் தமிழக அரசு.

தமிழ்நாடு சமூக நலத்துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உலக மகளிர் தினவிழா மார்ச் 2025ல் வழங்கபட உள்ளது.

Advertisement

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும். 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழி தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம். சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவாக அறிக்கையுடன் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து அதன் 2 நகல் மற்றும் சமூகப்பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற்று 31.12.2024-க்குள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் 06.01.2025-க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .

Tags :
Tamilnadutn governmentWomens awardதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article