முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் குறைவு..!! மற்ற மாநிலங்களில் எவ்வளவு தெரியுமா..? - வெளியான அறிக்கை

The Tamil Nadu government is proud to say that Tamil Nadu has the lowest domestic electricity charges in India
01:31 PM Dec 16, 2024 IST | Mari Thangam
Advertisement

வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில்தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிலும் 2 இலட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் யூனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. என்றாலும், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் மற்ற மாநிலங்கள் போல் உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும்.இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிருவாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488.

ராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833, மராட்டிய மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.668, உத்தரப் பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.693, பீகாரில் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.684, மேற்கு வங்க மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.654, கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631, மத்தியப் பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, ஒரிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.426, சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431 வசூலிக்கப்படுகிறது.

இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது.இதனை திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழ்நாடு அரசோ, குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சார கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த் வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதலமைச்சர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை, எளியோரின் நல வாழ்வில்செலுத்திவரும் அக்கறையும் கரிசனமும் வெள்ளிடை மலையாக விளங்குகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் முறை முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது..? இதன் பின்னால் இருக்கும் வரலாறு என்ன?

Tags :
Chennaidomestic electricity chargeselectricity chargesindiaTamilnadutn government
Advertisement
Next Article