மதுரை ஜல்லிக்கட்டு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு..!!
தமிழக பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என தொடர்ந்து திருவிழா கோலமாக தமிழர்கள் கொண்டாடுவர். இதையொட்டி பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பர். இந்னிலையில் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது. ஜல்லிக்கட்டின் போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விலங்குகள் நல வாரியக்குழு, நிகழ்ச்சியின் போது உடனிருந்து அறிக்கை அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
Read more ; 3 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பும் காதலனுடன் தகாத உறவு..!! இருவருக்கும் திருமணம் செய்து வைத்த கணவன்..!!