முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கட்டணம் குறைப்பு...!அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமே...! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு..‌!

06:23 AM Dec 02, 2023 IST | 1newsnationuser2
Advertisement

அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட், வில்லாவுக்கு பத்திரம் பதிவு செய்ய முத்திரை தீர்வை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம். குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக மனைக்கான கிரைய பத்திரம் மற்றும் கட்டுமான ஒப்பந்த ஆவணம் ஆகியவை தனித்தனியாக பதிவு செய்யப்படுகிறது.

Advertisement

பிரிக்கப்படாத பாக மனையின் கிரைய ஆவணத்துக்கு, தற்போதுள்ள நடைமுறையில் மனையின் சந்தை வழிகாட்டி மதிப்புக்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தத்துக்கு குடியிருப்பின் கட்டுமான விலைக்கு தலா ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் கடந்த ஜூலை 10 முதல் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு, கட்டுமான விலைக்கு 1 சதவீதம் முத்திரைத்தீர்வை, 3 சதவீதம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்னதாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட், வில்லாவுக்கு பத்திரம் பதிவு செய்ய முத்திரை தீர்வை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
apartmenthousetn government
Advertisement
Next Article