For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் உள்ள சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணிம் பெயர்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!

The Tamil Nadu government has named the street of the house where Sp Balasubraman lived after him.
05:55 AM Sep 26, 2024 IST | Vignesh
சென்னையில் உள்ள சாலைக்கு எஸ் பி பாலசுப்பிரமணிம் பெயர்     முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

தமிழக அரசு எஸ்.பி.பாலசுப்பிரமணிம் வாழ்ந்த வீட்டின் வீதிக்கு அவரின் பெயரையே சூட்டியிருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம்‌ தேதி பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணிம் மறைந்தார். அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் பாடல்கள் டாப் இடத்தை இன்றும் பிடித்திருகிறது. அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிட கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார் எஸ்.பி.பி-யின் மகன் சரண். இந்த கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் வீதிக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயரைச் சூட்டியிருக்கிறது தமிழக அரசு.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.

அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

Tags :
Advertisement