முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..!!

The Tamil Nadu government has issued an explanation amid rumors that animal fat has been added to the ghee used to prepare panchamirtam at the Palani temple.
06:36 PM Sep 20, 2024 IST | Mari Thangam
Advertisement

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று (20.09.2024) மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

Advertisement

லட்டு விவகாரம் ஒருபுறம் பூதாகரமாகி வரும் நிலையில் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, இப்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்திலிருந்து நெய் வாங்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுவதாக தமிழக அரசின் சார்பில் இது சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு; பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பது வதந்தி. பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; குடிபோதையில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர்..!! எடப்பாடியில் அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
panchamirtamtn government
Advertisement
Next Article