அடேங்கப்பா... மூணே நாள்ல இத்தனை லட்சம் பேர்.. அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணமா?
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் R. மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த 10ம் தேதி முதல் 14ம் தே வரை 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2.092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, ஜன.15ம் தேதி முதல் 19ம் தேதி தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், இன்று 28,022 பயணிகளும், நாளை 29,056 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read more ; திருமணம் தாமதமாகிறதா? இந்த எளிய பரிகாரங்களை செய்யுங்கள்.. உடனே திருமணம் முடிவாகும்..!