Holiday | நாளை மொஹரம் பண்டிகையொட்டி தமிழகத்தில் பொது விடுமுறை..!!
ஜூலை 17 ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழில் 12 மாதங்கள் குறிப்பிடப்படுவதை போல, இஸ்லாமிய ஆண்டு நாட்காட்டியின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
அன்றைய தினம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடுவார்கள்.. அந்த வகையில், இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை, ஜூலை 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த பண்டிகையையொட்டி, தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Read more ; தோடா என்கவுன்டர் : எல்லையில் 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரை பறித்த காஷ்மீர் டைகர்ஸ் கேங்..!!