2024-25-ல் பத்திரப் பதிவுத்துறையின் வருவாய் அதிகரிப்பு..! தமிழக அரசு தகவல்
வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் வருவாய் 2024-25-ல் ரூ.7,8211 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.9,085 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டும் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வணிகவரித் துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் (செப்டம்பர் மாதம் வரை) ரூ.59,758 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்நிலையில் நிகழும் 2024-25 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான வருவாய் ரூ.67,548 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடந்த நிதிஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக ரூ.7,800 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் (செப்டம்பர் வரை) வருவாய் ரூ.9,378 கோடியாகும். 2024-25 நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.10,663 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்படி கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.1,285 கோடி வருவாய் வந்துள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் வருவாய் 2024-25-ல் ரூ.7,8211 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.9,085 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
நவீனதொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி தமிழக வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து கூடுதல் ஆணையர்களும், இணை ஆணையர்களும் ஒன்றினைந்து ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.