அட்டகாசம்... மாணவர்களுக்கு ரூ.15,000 வரை பரிசுத்தொகை அறிவித்த தமிழக அரசு...! மிஸ் பண்ணிடாதீங்க
தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, அப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, அப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 21.01.2025 அன்று அண்ணாசாலை, மதராசா ஐ ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி இந்த போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு 22.01.2025 அன்று அண்ணாசாலை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி, வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாவட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் 28.01.2025 அன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், 29.01.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். மாநிலப் போட்டிக்குரிய பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 15,000, இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 12,000, மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 10,000 பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.