டிஜிட்டல் ரூட்டில் டாஸ்மாக்.. ஒவ்வொரு பாட்டிலுக்கும் பில்..!! டாஸ்மாக்கில் இதெல்லாம் மாறுது.. எப்போது அமல்?
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க வரும் குடிமகன்கள் ஒவ்வொருவரும் வைக்கும் குற்றச்சாட்டு ஒன்றுதான்.. அதாவது அரசு நிர்ணயித்த விலையைவிட ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது என்ற புகாரை தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு அவ்வப்போது கடும் நடவடிக்கை எடுத்த போதிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது நிறுத்தப்படவில்லையாம்.
தொடர்ந்து பல மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுகிறது என்றும், புல் பாட்டில் வாங்கினால் 40 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாகவும், ஆப் பாட்டில் என்றால் 20 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். எனவே இந்த துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணியினை தொடங்கி உள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குவோருக்கு விரைவில் பில் கிடைக்கும். யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அத்துடன் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகப்போகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக முதல்கட்டமாக சென்னை, கோவையில் இந்த திட்டம் அமலுக்கு வரப்போகிறது. இந்த திட்டம் தீபாவளி முடிந்த பிறகு நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more ; கடல்வாழ் நாடோடிகள்.. நாடு கிடையாது..!! பல நூற்றாண்டுகளாக கடலில் வாழ்ந்து வரும் மக்கள்..!!