முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

EVM & VVPAT வழக்கு: "உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த பலமான அறை..!" - பிரதமர் மோடி

05:02 PM Apr 26, 2024 IST | Mari Thangam
Advertisement

விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை "எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் உட்பட பலதரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்துவந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது VVPAT ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவிகிதம் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ADR மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. மேலும், “இந்த வழக்கின் கோரிக்கையை நடைமுறையில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பதிவில் உள்ள தரவுகளின் அடிப்படையில் நிராகரிக்கிறோம்" எனத் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பிஹார் மாநிலம் அராரியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இன்று நமது ஜனநாயகத்துக்கு ஒரு மகத்தான நாள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து குறைகூறி வந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் இன்று கடுமையாக அறைந்துள்ளது உச்ச நீதிமன்றம். அவர்கள் எல்லோரும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். நமது ஜனநாயகம் மற்றம் தேர்தல் முறை குறித்து உலகமே பாராட்டி வரும் வேலையில், அவை குறித்து சொந்த நலனுக்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றன" என்று தெரிவித்தார்.

அங்கு அவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து, கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளாமல் அவர்களை ஒபிசி பட்டியலில் சேர்த்துள்ளன. அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி கவலை இல்லை. பல தசாப்தங்களாக அவர்கள் மக்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. மக்களை வாக்களிக்க கூட அவர்கள் விடவில்லை.

தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக ஏழைகள், நேர்மையான வாக்களார்கள் பலம் பெற்றுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற எதிர்க்கட்சிகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள்" என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Tags :
BiharEVM & VVPATPM Modi
Advertisement
Next Article