முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'20 வருட சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி' - கவுண்டமணியின் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

02:07 PM May 14, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Advertisement

1980-களில் தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. கிட்டத்தட்ட ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய இவர், கடந்த 1996-ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்டு மற்றும் 454 சதுர அடி நிலத்தை கிரையம் செய்து, அங்கு வணிக வளாக கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டார்.

அதன்படி ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்கிற கட்டுமான நிறுவனத்திடம் அந்த இடத்தை ஒப்படைத்த கவுண்டமணி 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் ஒன்றினை 15 மாதங்களில் கட்டி முடித்து தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன், ரூ.3.58 கோடியை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்டிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த அந்நிறுவனம் சொன்னபடி கட்டிமுடிக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து,  2003 ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி,  கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.  வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்,  நடிகர் கவுண்டமணி இடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,  கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இதையடுத்து,  நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உத்தரவை எதிர்த்து அந்த கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.  இந்த மனு  நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.

Tags :
actor kavundamanisuprime court
Advertisement
Next Article