விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும் வரை கணவனின் வீட்டில் மனைவிக்கு முழு உரிமை உண்டு..!! - உச்ச நீதிமன்றம்
விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும்வரை கணவன் வீட்டில் மனைவிக்கு அனைத்து உரிமையும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்புத் தொகையை ரூ. 80,000 ஆகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 2022-ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிபி வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கேரளாவை சேர்ந்த இருதய நோய் நிபுணருக்கும், ஒரு பெண்ணுக்கும் 2008 செப்.15 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. டாக்டருக்கு இது 2வது திருமணம். இந்த நிலையில் 2வது திருமணத்திலும் பிரச்னை ஏற்பட்டு 2019 மார்ச் 19 அன்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். விவாகரத்து மனு நிலுவையில் இருந்தபோது, சென்னை குடும்பநல நீதிமன்ற ம் ரூ.1.75 லட்சம் மாதம் தோறும் மனைவிக்கு வழங்க டாக்டருக்கு உத்தரவிட்டது.
இதை சென்னை உயர் நீதிமன்றம், ரூ.80 ஆயிரமாக குறைத்தது. இதை எதிர்த்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தின் முன், கணவர் பராமரிப்புத் தொகையை மேலும் குறைக்கும்படி வேண்டிக்கொண்டார், அதே சமயம் மனைவி அதை அதிகரிக்க வேண்டிக்கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கூறுகையில்,’ பராமரிப்புத் தொகையை மாதம் 80,000 ரூபாயாக குறைத்ததில் உயர்நீதிமன்றம் தவறிழைத்துள்ளதை நாங்கள் காண்கிறோம். எதிர்மனுதாரருக்கு இரண்டு வருமான ஆதாரங்களை மட்டுமே உயர் நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. முதலாவதாக, ரூ. 1,25,000 அவர் மருத்துவமனையில் இருதயநோய் நிபுணராகப் பணியாற்றியதன் மூலம் சம்பாதிக்கும் தொகை இரண்டாவதாக, அவர் மற்றும் அவரது தாயார் சொத்திலிருந்து பெறும் வாடகைத் தொகை. இருப்பினும், அந்த பெண் பாதித் தொகையை மட்டுமே பெறுகிறார்.
மனைவியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனைவியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இடைக்காலப் பராமரிப்புத் தொகையாக கணவருக்கு மாதம் ₹ 1,75,000 வழங்க வேண்டும் என்ற குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை மறுசீரமைத்தது. திருமணத்திற்குப் பிறகு தனது வேலையைத் தியாகம் செய்ததால் மனைவி வேலை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு தனது வேலையைத் தியாகம் செய்ததால் மனைவி வேலை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.