பதவி ஏற்றதுமே ஷாக்.. தலைமைச் செயலர் நேரில் ஆஜராக வேண்டும்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெ இறையண்பு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா செயல்பட்டு வந்தார். ஓராண்டுக்கும் மேலாக அவர் அந்த பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு முன்னதாக வெளியிட்டுள்ளது.
அதனைதொடர்ந்து, கடந்த சில தினக்களுக்கு முன்பு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 1991-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான முருகானந்தம் தற்போது முதலமைச்சரின் முதன்மை செயலாளராக உள்ளார். இவர், தலைமைச் செயலராகப் பொறுப்பேற்று 3 நாட்களிலேயே, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள், சட்டத்துறை அதிகாரிகள் நியமனம், ஓய்வூதியம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் ஆகியோர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். தலைமைச் செயலர் முருகானந்தம் அண்மையில் தான் பொறுப்பேற்றதால், அவர் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வீடியோ மூலம் ஆஜராவார் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்ததோடு, சொல்ல விரும்பும் கருத்துகளை நேரில் ஆஜராகி கூற என்ன தயக்கம்? என்றும் கேள்வி எழுப்பினார்.
Read more ; தவெக கொடி அறிமுக விழாவில் எழுந்த சர்ச்சை.. ஃபைன் கட்டிய தவெக தலைவர் விஜய்..!!