For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை..!! விரைவில் ரிலீஸ்?

The Supreme Court has issued a swift order by imposing an interim stay on the trial of 16 cases against Chavku Shankar
01:54 PM Aug 14, 2024 IST | Mari Thangam
சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை     விரைவில் ரிலீஸ்
Advertisement

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட அவர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது அதிரடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தான் 2வது குண்டர் சட்டம் பாய்வதற்கு முன்பாகவே சவுக்கு சங்கர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் சார்பில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

இந்த ரிட் மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதனை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். அதுமட்டுமன்றி சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 17 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Read more ; செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஏமாற்றம்..!! வழக்கை ஆகஸ்ட் 20-க்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

Tags :
Advertisement