மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!!
செந்தில் பாலாஜி ஊழல் வழக்கை விசாரிக்க தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைந்திருந்தது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், வெளிவந்த மூன்றே நாளில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இப்போது, அவர் மீண்டும் அமைச்சராகியிருப்பதால் ஜாமீனைப் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு, மறுபரிசீலனைக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். செந்தில் பாலாஜி மீதான 29 வழக்குகளை தற்போது விசாரிக்கும் அமர்வுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும், மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
Read more ; தடையை மீறி புல்டோசர் நடவடிக்கை.. அசாம் அரசுக்கு அவமதிப்பு நோட்டீஸ்..!! – உச்சநீதிமன்றம் அதிரடி