முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’வாழை’ திரைப்படத்தின் கதை என்னுடையது..!! 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளேன்..!! எழுத்தாளர் சோ.தர்மன் வேதனை..!!

Mari Selvaraj's Banana film is her own experience. It's my story too.
05:06 PM Aug 28, 2024 IST | Chella
Advertisement

மாரி செல்வராஜ் இயக்கி கடந்த 23ஆம் தேதி வெளியான வாழை திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை படமாக எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும் 'நீர்ப்பலி' எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக சோ.தர்மனை அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டு வாழை படத்தை பார்க்குமாறு கூறியதாகவும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisement

இவ்விவகாரம் தொடர்பாக சோ.தர்மன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வாழை திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழை திரைப்படத்தை சிறுகதையாக எழுதியுள்ளேன். என்னுடைய சிறுகதைக்கு பெயர் வாழையடி என்று இருக்கும். ஏனென்றால், வாழையடி வாழையாக சிறுவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று எழுதியிருப்பேன்.

நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத்தான் தற்போது மாரி செல்வராஜ் காட்சி ஊடகத்தில் திரைப்படமாக கொண்டு வந்துள்ளார். வாழை திரைப்படத்தில் சிறுவர்கள் வாழைத்தார் தூக்கி கஷ்டப்படும் காட்சிகள், இடைத்தரகர்களால் ஏற்படும் பிரச்சனைகள், தண்ணீரில் விழும் காட்சிகள் என என்னுடைய சிறுகதையில் வரக்கூடிய அத்தனை காட்சிகளும் வாழை திரைப்படத்தில் உள்ளது.

கரிசல்காட்டு இலக்கிய எழுத்தாளரான நான், வாழை பற்றி எழுத காரணம் என்னுடைய உறவினர்கள் பொன்னங்குறிச்சி பகுதியில் இருந்தபோது, அங்கு வாழை லாரியில் ஏற்றி செல்லப்படும். அங்கு சிறுவர்கள் கஷ்டப்படுவதை கேட்டு என் சிறுகதையில் எழுதியுள்ளேன். இக்கதையை பயன்படுத்த முறையாக யாரும் அனுமதி பெறவில்லை. என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை.

கதை எங்கு நிகழ்கிறதோ அங்கு தான் அதை காட்சிப்படுத்தி திரைப்படமாக எடுக்க வேண்டும். ஒட்டு துணியை பெரக்கி, பட்டு சேலை தைத்து தன் பெயரை வைத்து கொள்வது தான் தற்போதைய இயக்குனர்கள் வேலை. மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் அவருடைய சொந்த அனுபவம் தான். என்னுடைய கதையும் தான். சிறுவர்கள் படும் வலி, வேதனையை முதன் முதலில் படைப்பாக உருவாக்கியவன் நான் தான். அதற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். அதனால் வாழை திரைப்படம் லட்சக்கணக்கான பேரிடம் சென்றடைந்துள்ளது. என்னுடைய சிறுகதை இலக்கியமாக ஆயிரம் பேருடன் நின்றுவிட்டது” என்றார்.

Read More : பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு..!! மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!

Tags :
எழுத்தாளர்சோ.தர்மன்மாரி செல்வராஜ்வாழை திரைப்படம்
Advertisement
Next Article