For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முதல் பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டி உருவான கதை..!! சுவாரஸ்ய தகவல்..!!

02:36 PM Apr 09, 2024 IST | Chella
முதல் பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டி உருவான கதை     சுவாரஸ்ய தகவல்
Advertisement

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த தேர்தலில், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது. வாக்குகளை செலுத்துவதற்கான வாக்குப் பெட்டிகளை மும்பையின் கோத்ரேஜ் நிறுவனம் தயாரித்தது. அந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த வாக்குப் பெட்டி 72 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது.

Advertisement

இதுதொடர்பாக கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைமை காப்பாளர் விருந்தா பதாரே கூறுகையில், முதல் பொதுத்தேர்தலுக்கு தேவையான வாக்குப்பெட்டிகளை தயாரிக்குமாறு அரசு கூறியதை அடுத்து, 1950ஆம் ஆண்டில் அதற்கான தயாரிப்பு பணியில் கோத்ரேஜ் நிறுவனம் ஈடுபட்டது. இதையடுத்து, வாக்குப்பெட்டிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

அந்த பெட்டிகள் தண்ணீரில் சேதமடையாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான தேவையாக இருந்தது. பெட்டிகள் காற்று புகார் வண்ணம் மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த தேவைகளின் அடிப்படையில் வாக்கு பெட்டிகளை வடிவமைக்க பொறியாளர்கள் திட்டமிட்டனர். அதனை உருவாக்கும் பணியாளர்களும் அது குறித்த யோசனைகளை வழங்கினார். இறுதி வடிவத்தை எட்டுவதற்கு முன்பாக அவர்கள் 50 வெவ்வேறு வகையான மாதிரிகளை உருவாக்கினர்.

எனினும் இதில் சிரமங்கள் இருந்தன. இந்த பெட்டியின் விலை அக்காலத்தில் 5 ரூபாய் தான். ஆனால், அதற்கான பூட்டுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருந்தது. அதனால், பணியாளர்களிடம் அந்த பெட்டியின் வடிவமைப்பை மாற்றுவதற்கான யோசனைகள் கேட்கப்பட்டன. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையே, மும்பையின் விக்ரோலியில் உள்ள தொழிற்சாலையில் இந்த வாக்கு பெட்டிகளை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கின. வாக்குப்பெட்டியின் உள்ளே காற்று புகாத வண்ணம் மூடுவதற்கான யோசனையை நாத்தலால் பஞ்சால் எனும் பணியாளர் முன் வைத்தார். இதன் அடிப்படையில் பல சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மும்பையின் லால்பாக்கில் உள்ள பழமையான தொழிற்சாலையில் வாக்குப்பட்டி இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டது.

'தி பாம்பே க்ரானிக்கிள்' எனும் செய்தித்தாளில் வெளியான செய்தியின்படி, அச்சமயத்தில் கோத்ரேஜ் நிறுவனத்தின் விக்ரோலி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. முதல் பொதுத் தேர்தலில் 12 லட்சம் வாக்குப்பெட்டிகள் ரயில்கள் மூலம் இந்தியாவின் 23 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்..!! விரைவில் வெளியாகும் செம குட் நியூஸ்..!!

Advertisement