கேரளாவில் மீண்டும் நிஃபா வைரஸ் பரவல்..!! சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை..!!
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிஃபா வைரஸ் தொற்று கேரளத்தில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றை விட, தற்போது கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஆகவே, இதனை கட்டுப்படுத்துவதற்கு, அந்த மாநில சுகாதார துறையும், மாநில அரசும், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, கேரள மாநில மக்களுக்கு கேரள மாநில அரசும், சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் போது கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவேளை, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தையும் தற்போதும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மலப்புரம் மாவட்டத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வைரஸ் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு குழுக்களை அமைத்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read more ; தனது கிராமத்திற்காக மலையையே குடைந்த கூலி தொழிலாளி!! என்ன காரணம் தெரியுமா?