"ஐரோப்பா மோதல்.. மக்கள் தொகை அடியோடு குறையும்!!" - பாபா வங்காவின் பகீர் கணிப்பு
பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்து வைத்துள்ளார். இவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர். மேலும், கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா தாக்குதல் குறித்தும் அவர் கணித்திருந்தார்.
அந்த வகையில், வரவிருக்கும் ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பது குறித்தும் கணித்துள்ளார். அவரின் கணிப்புகளில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டுகள் குறித்த பாபா வங்கா கணிப்புகள் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படும் என்றும், இதன்மூலம் அந்த கண்டத்தில் ஏராளமான மக்கள் உயிரிழப்பார்கள், பெரும் மக்கள் தொகை குறையும் என்றும் கணித்துள்ளார்.
இந்த 2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்படுவார் என்றும் பாபா வங்காவின் கணிப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2028 ஆம் ஆண்டில், மனிதர்கள் வெள்ளிக் கிரகத்தை அடைவார்கள் என்றும் அதில் புதிய ஆற்றல் மூலங்கள் கண்டறியப்படும் என்றும் கணித்துள்ளார். 2033 இல், பூமியின் துருவப் பகுதிகளில் பனி உருகும் என்றும் இதனால் பூமியின் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2076 ஆம் ஆண்டுக்குள், மீண்டும் உலகத்தை கம்யூனிசம் ஆளும் என்றும், 2130 இல் வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 3005 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் போர் மூளும் என்றும் 3797 இல் பூமியின் அழிவு தொடங்கும் என்றும் கணித்துள்ளார்.