தந்தையை தொடர்ந்து அசத்திய மகன்..!! கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்..!! குவியும் வாழ்த்து..!!
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் தனது அணியுடன் கலந்து கொண்டார். போட்டியின் முடிவில் அஜித் அணி 3-வது இடத்தை பிடித்தது. இந்த மெகா வெற்றியை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையே, அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய் வாழ்க அஜித் வாழ்க என்று சொல்கிறீர்கள்… நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்? என அஜித் பேசியுள்ளார். அவர் பேசுகையில், உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். `அஜித் வாழ்க விஜய் வாழ்க’ எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்..? என பேசியிருந்தார் அஜித்.
கார் ரேஸில் வெற்றி பெற்றதை அடுத்து, அஜித் தனது அணியுடன் பரிசு வாங்கும் போது, தனது மகனை மேடையில் அழைத்து அவருடன் சேர்ந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தான், தற்போது சென்னையில் நடந்த GO KART கார் ரேஸில் அஜித் மகன் ஆத்விக் முதல் பரிசை வென்றுள்ளார். ஏற்கனவே அஜித் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் அசத்தி வரும் நிலையில், தற்போது கார் ரேஸிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, அஜித் மகன் ஆத்விக்கிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Read More : இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு..!! சாதனைப் படைத்த இந்தியா..!! அசத்திய இஸ்ரோ..!! குவியும் பாராட்டு..!!