அட இது நல்லா இருக்கே.. இனி டிராஃபிக் பத்தி கவலை இல்லை..!! புது சாப்ட்வேர் பயன்படுத்தும் மத்திய அரசு..!!
சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறித்த விவரங்களை நேரடியாக அறிந்துகொள்ள மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வாகனங்கள் சுங்கச்சாவடிகளை நெரிசலின்றி கடந்து செல்ல ஏதுவாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்(என்ஹெச்ஏஐ) 'இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடட் (ஐஹெச்எம்சிஎல்)' - 'ஜிஐஎஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான மென்பொருளை வடிவமைத்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறித்த விவரங்களை நேரடியாக அறிந்துகொள்ள இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. முதல்கட்டமாக 100 சுங்கச்சாவடிகளில் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் உதவி மைய எண் 1033 மூலம் பெறப்பட்ட குறைகள் மற்றும் கருத்துகளை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் 100 சுங்கச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
படிப்படியாக பிற சுங்கச்சாவடிகளிலும் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மென்பொருள் சுங்கச்சாவடியின் பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை வழங்குவதுடன், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் எவ்வளவு தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன, எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் கடந்து செல்ல முடியும் ஆகிய விவரங்களையும் இந்த மென்பொருள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
மேலும், சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா உள்ளிட்ட வானிலை விவரங்களையும் அப்பகுதியில் நிலவும் காலநிலை சூழலையும் அறிந்துகொள்ளலாம். சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏதேனும் திருவிழாக்கள் நடைபெறுகிறதா? அதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதா ஆகிய விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
Read more ; மத்திய அரசு அதிரடி…! பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய SHe-Box இணையதளம்…!