விமானம் அளவுக்கு பெரிய சைஸ்..!! நாளை பூமியை நெருங்கும் 2 எறிகற்கள்..!! ஆபத்தா..? நாசா எச்சரிக்கை..!!
சூரிய குடும்பத்தையும், பால்வழி அண்டத்தையும் ஆய்வு செய்ய நாசா பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. இது டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் சைக் 16 கோளில் இருந்து லேசர் சிக்னல் பூமிக்கு கிடைத்தது. அன்படி, 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து அந்த விண்கலம் தகவல்களை நாசாவுக்கு அனுப்பியது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போன்று 1.5 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பூமியை நாளை (செப்டம்பர் 24) இரண்டு எறிகற்கள் நெருங்குவதாக நாசா எச்சரித்துள்ளது. அவற்றிற்கு 2020 GE, 2024 RO11 என்று நாசா பெயரிட்டுள்ளது. இதில் 2020 GE எறிகள், ஒரு பேருந்து சைஸ் உடையதாம். இது பூமியை 4.10 லட்சம் மைல் தொலைவில் கடக்கும் என்று நாசா தெரிவித்திருக்கிறது.
அதேபோல், 2024 RO11 எறிகல், விமானம் அளவுக்கு பெரியதாம். அது 45.80 லட்சம் மைல் தொலைவில் பூமியை கடக்கும் என்றும் இந்த இரண்டு எறிகற்களால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் நாசா விளக்கம் அளித்துள்ளது.
Read More : மைனர் பெண் பலாத்காரம்..!! போலீசிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி..? வெளியான பரபரப்பு தகவல்..!!