முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

3 கிராமி விருதுகளை தட்டித்தூக்கிய பாடகரை கையோடு தூக்கிச் சென்ற போலீஸ்..!! பெரும் பரபரப்பு..!!

05:44 PM Feb 05, 2024 IST | 1newsnationuser6
Advertisement

3 கிராமி விருதுகளைப் பெற்ற கையோடு பாடகர் கில்லர் மைக்கை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுபவை கிராமி விருதுகள். நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 66-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஜாகிர் உசேன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சக்தி என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது.

இந்த விழாவில் அட்லாண்டாவைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரான கில்லர் மைக்கிற்கு 3 கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், விருது பெற்ற கையோடு அங்கிருந்த சிலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு வாக்குவாதம் செய்தார். இதனால், அவரை அங்கிருந்த போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், கைதான சில மணி நேரத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
3 கிராமி விருதுகள்அமெரிக்காபாடகர் கில்லர் மைக்
Advertisement
Next Article