For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூள்..! அரசு பேருந்தில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்... இந்த ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும்...!

The 'Singara Chennai Smart Card', which was introduced for traveling on public transport in Chennai, is being launched today.
05:55 AM Jan 06, 2025 IST | Vignesh
தூள்    அரசு பேருந்தில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்    இந்த ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும்
Advertisement

சென்னையில் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட "சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை" இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

சென்னையில் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட "சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை" இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் பாரத் ஸ்டேட் வங்கி மூலம் கட்டணமின்றி வழங்கப்படும்.

Advertisement

மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும். இதற்காக ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையம், மின்சார ரயில்களில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீசார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுன்டர்களில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. முதற்கட்டமாக, மெட்ரோ ரயில்களில் மட்டுமே இருந்து வந்த இந்த சிங்காரச் சென்னை பயண அட்டை , இனி மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது . மேலும் மின்சார ரயில்கள் , விரைவு ரயில்கள் சாப்பிட மற்ற போக்குவரத்திற்கும் பயன்படுத்தும் வகையில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement