உலகின் மிகக் குறுகிய தெரு!. கின்னஸ் உலக சாதனையில் பதிவு!. எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?
Guinness: உலகின் மிகக் குறுகிய தெரு எந்த நாட்டில் உள்ளது மற்றும் அதன் பெயர் கின்னஸ் உலக சாதனையில் ஏன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
உலகெங்கிலும் இதுபோன்ற பல அற்புதமான பதிவுகள் அல்லது படைப்புகள் உள்ளன, அவற்றின் பெயர்கள் கின்னஸ் உலக சாதனைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், உலகின் மிகச்சிறிய தெரு கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. இந்த தெரு பிரிட்டனில் அமைந்துள்ளது. இதன் நீளம் ஆறு அடி, 2.06 மீட்டர் நீளம் மட்டுமே உள்ளது. மிகவும் பழமையான வரலாறை கொண்ட இந்த தெருவின் பெயர், எபினேசர் பிளேஸ் ஆகும். மேலும், இது பூமியில் உள்ள மிக உயரமான நபரை விடக் குறைவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் கெய்த்னஸில் உள்ள இந்த சிறிய தெரு, மக்கேஸ் ஹோட்டலின் ஒரு பகுதியான எண். 1 பிஸ்ட்ரோ என்ற ஒரே ஒரு முகவரி மட்டுமே உள்ளது. அதாவது, மக்கேஸ் ஹோட்டலின் ஒரு பகுதியான எண். 1 பிஸ்ட்ரோவின் நுழைவாயில் ஆகும்.
தகவல்களின்படி, எபினேசர் பிளேஸின் வரலாறு 1883 இல் தொடங்கியது. எபினேசர் பிளேஸ் கட்டப்பட்டபோது, ஹோட்டலின் மிகச்சிறிய பகுதியில் பெயரை எழுதுமாறு கட்டிடத்தின் உரிமையாளரிடம் கூறப்பட்டது. இது 1887 இல் அதிகாரப்பூர்வமாக ஒரு தெருவாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஹோட்டல் 1883 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் சின்க்ளேயரால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Readmore:சென்னை உட்பட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!. மத்திய அரசு!