சர்க்கரையின் விற்பனை விலை அதிரடியாக உயருகிறது..? ஓரிரு நாளில் வெளியாகும் அறிவிப்பு..!!
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய உள்ளது.
அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் நடத்திய கருத்தரங்கில் மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இந்த விஷயத்தில் நாங்கள் ஓரிரு நாள்களில் முடிவு செய்வோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”2024-25ஆம் ஆண்டு பருவத்துக்கான (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு 57 லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. இந்தாண்டில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவு 58 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
கடந்த 2019 முதல் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை கிலோவுக்கு ரூ.31-ஆக இருந்து வருகிறது. தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை கிலோவுக்கு ரூ.42ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 2023-24ஆம் ஆண்டு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 32 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 32.8 மில்லியன் டன்னைவிட குறைவாகும். எனினும் உள்நாட்டுத் தேவையான 27 மில்லியன் டன்னை எதிர்கொள்ள இது போதுமானதாகும்.
Read More : பெண்களே உஷார்!. கருத்தடை மாத்திரைகள்!. இத்தனை பக்க விளைவுகள் ஏற்படுகிறதா?