முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாஸாக வெளியான 'புஷ்பா2' படத்தின் இரண்டாவது பாடல்..!! வீடியோ உள்ளே..!!

Rashmika Mandhana's 'Couple Song' from Allu Arjun starrer 'Pushpaa 2' is out.
02:38 PM May 29, 2024 IST | Chella
Advertisement

அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் 'புஷ்பா2' படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனாவுடனான 'கப்புள் சாங்' பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'புஷ்பா2' படத்தின் இரண்டாவது பாகம் 'புஷ்பா2: தி ரூல்' வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன்களை படக்குழு தொடங்கியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முன்பு 'புஷ்பா…புஷ்பா' பாடல் வெளியான நிலையில், இரண்டாவது சிங்கிளாக 'சூடான' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் ராஷ்மிகா, அல்லு அர்ஜூனின் 'சாமி சாமி' பாடல் போல, இரண்டாவது பாகத்தில் இந்த 'சூடான' பாடல் காதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலின் மேக்கிங் வீடியோவாக வெளியாகி இருக்கும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, இயக்குநர் சுகுமார், நடனக் கலைஞர்கள் எனப் பலரும் இருக்கும் இந்தப் பாடல் பிரம்மாண்டமான செட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'சூடான' பாடல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ‘இனி விஜயுடன் ஈடுபாடு இருக்கும்’..!! தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன குட் நியூஸ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

Tags :
allu arjun pushpa 2allu arjun pushpa songangaaron pushpa 2 songPushpapushpa 2pushpa 2 angaaron songpushpa 2 new songpushpa 2 songpushpa 2 song allu arjunpushpa 2 song promopushpa 2 song reactionpushpa 2 songspushpa 2 teaserpushpa 2 the rulepushpa 2 trailerpushpa pushpapushpa pushpa allu arjunpushpa pushpa dsp songpushpa pushpa new songpushpa pushpa pushpa 2 the rulepushpa pushpa songpushpa songstelugu songs
Advertisement
Next Article