ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பேருந்து.. கொந்தளித்து பள்ளி மாணவன் செய்த செயல்..!!
உளுந்தூர் பேட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து மீது பள்ளி மாணவர்கள் கல் எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே, உள்ள கிராமத்தில் அரசு பேருந்து நிற்காமல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் பேருந்து நிறுத்தத்தில் நிற்க்காமல் சென்றுள்ளது. இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த ஒரு மாணவன் பேருந்து கண்ணாடி மீது கற்களை எறிந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கும் பேருந்து ஓட்டுநர்-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீஸார், விரைந்து சென்று உடைந்த பஸ் கண்ணாடியை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். பஸ் கண்ணாடி உடைந்தது. எனினும், பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் சிறு காயம் கூட இல்லாமல் தப்பினர். சமீப காலமாக இதுபோல், பஸ்கள் நிறுத்தாமல் செல்வதாகவும், ஆத்திரமடையும் மாணவர்கள் இதுபோல் பஸ் கண்ணாடியை உடைக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா காலத்திற்கு முன் மதுரை மாநகர், புறநகர் பகுதியில் இயக்கப்பட்ட பஸ்கள் எண்ணிக்கையையும், தற்போது இயக்கப்படும் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கரோனாவுக்கு பிறகு ஒவ்வொரு வழித்தடங்களிலும் அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மாணவர்கள், முன்போல் பஸ்களில் பயணம் செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை என்பதை குற்றசாட்டாக முன்வைக்கின்றனர்.
Read more ; மகிழ்ச்சி செய்தி..! குறை தீர்க்கும் காலக்கெடு 30 நாட்களில் இருந்து 21 நாட்களாக குறைப்பு…!