அனுமதியே கேக்கல.. எங்களுக்கு எதுவும் தெரியாது..!! - ஆன்மிக சொற்பொழிவு குறித்து பள்ளி மேலாண்மை குழு பேட்டி..!!
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மகா விஷ்ணு மாணவியர் முன்னிலையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதற்கிடையே, அப்பள்ளியின் மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகா விஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பேசிய அன்பில் மகேஷ், மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சியினரும் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கும் பள்ளி மேலாண்மை குழுவிற்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.சித்ரகலா மற்றும் உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த மாதிரியான நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நாங்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தனர்.
Read more ; சர்ச்சை பேச்சு..!! மகா விஷ்ணு அதிரடி கைது..!! ரகசிய இடத்தில் வைத்து விசாரணை..?