முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Tn Govt: மகிழ்ச்சி செய்தி...! இவர்கள் அனைவரும் பதவி உயர்வு...! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு...!

06:10 AM Feb 27, 2024 IST | 1newsnationuser2
Advertisement

446 பேருக்கு 3-ம் நிலை நூலகர்களாக பதவி உயர் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்; கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்போது பொது நூலகத்துறையில் 3-ம் நிலை நூலகர்கள் பணியிடம் 2,058 உள்ளது. இதில் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஊர்ப்புற நூலகர்கள் 1,530 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 446 பேருக்கு 3-ம் நிலை நூலகர்களாக பதவி உயர் வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும். இதற்காக அரசுக்கு ரூ.8.32 கோடி கூடுதல் செலவு ஏற்படும்’ என தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், அரசுக்கு பொது நூலக இயக்குநர் எழுதிய கடிதத்தில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 1,915 ஊர்ப்புற நூலகர்கள் எவ்வித பதவி உயர்வும் இன்றி சிறப்பு காலமுறைஊதிய நிலையில் பணியாற்றிவருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தற்போது காலியாக உள்ள 446 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் அரசு விதிகளில் தளர்வுகள் வழங்கி, ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் தளர்வு செய்து, மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க அனுமதித்துள்ளது. இதன்மூலம், 8-ம் படிநிலையில் உள்ள காலமுறை ஊதியத்தை பெறுவார்கள். இதற்காக ரூ.6.81 லட்சம் அரசு நிதியில் இருந்து வழங்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : The school education department has ordered promotion of 446 people as 3rd level librarians

Advertisement
Next Article