முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

6ஆம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய பள்ளி நிர்வாகி..!! ’ஷூ’ போடாததால் வெறிச்செயல்..!!

10:27 AM Nov 23, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மதுரை மாவட்டம் கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது மகன் பஹியா ஜன்னா பப்ளிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் மழையின் காரணமாக ஷூ அணிந்து செல்வதற்கு பதிலாக பள்ளிக்கு செப்பல் அணிந்து சென்றிருக்கிறார் மாணவன் பஹியா. இதற்கு ஆசிரியர்களே எதுவும் சொல்லாத நிலையில் பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் ஷகீத் என்பவர், ஏன் ''ஷூ'' அணிந்து வரவில்லை எனக் கேட்டு மாணவனை கன்னத்தில் பலமாக அடித்திருக்கிறார்.

Advertisement

இதில், மாணவனின் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வையே பறிபோகும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், ஆசிரியர் அல்லாத ஒருவர், எப்படி தங்கள் மகனை அடிக்கலாம்? அவருக்கு யார் அந்த உரிமையை வழங்கியது? என பள்ளி நிர்வாகத்திடம் மாணவனின் தந்தை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்க, எங்களை ஒன்றும் செய்ய முடியாது, முடிந்ததை பாருங்க என ஆணவத்துடன் ஷகீத் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகார் மீது பள்ளி தாளாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கூறியதாவது, ''மாணவனின் தந்தை அளித்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தவிருக்கிறோம். நானே நேரடியாக விசாரணை நடத்தவுள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறினார்.

Tags :
6ஆம் வகுப்பு மாணவன்கண் பார்வைபள்ளி நிர்வாகிமதுரை மாவட்டம்
Advertisement
Next Article