For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

The rural aptitude test for scholarship will be held on December 14. Students are advised to apply by November 22.
10:28 AM Nov 13, 2024 IST | Mari Thangam
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை   இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Advertisement

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். இந்த தேர்வு எழுத மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழக தேர்வுத்துறை இயக்குநர் லதா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஊரகப் பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வை எழுதும் மாணவர்க்ளின் பெற்றோர் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும். தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் தலைமை ஆசிரியர் வயிலாக நவம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.

மாணவர்களிடம் பெற்ற விண்ணப்பங்களை தேர்வுத் துறை வெப்சைட்டில் நவம்பர் 14 முதல் 22-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவ மாணவிகளின் பள்ளி இருக்கும் ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்க வெண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; நிர்வாண வீடியோ கால்.. ஆபாச ஸ்கிரீன்ஷாட்.. மும்பை பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய தந்தை மகன்..!! கொத்தாக தூக்கிய வளசரவாக்கம் போலீஸ்!

Tags :
Advertisement