முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தவெக-வின் அடுத்த மூவ் என்ன? விஜய் கட்சியின் பலம் குறித்து ஸ்டாலினுக்கு போகும் சர்வே..!!

The ruling DMK is keeping a close eye on every move of the Tamil Nadu Vetri Kazhagam party. While the question of Vijay's role in the upcoming 2026 assembly elections is being discussed in political circles, Chief Minister Stalin wanted to know what are Vijay's strengths today.
04:09 PM Aug 25, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் ஆகஸ்ட் 22 விஜய் அறிமுகம் செய்து வைத்தார். ஆகஸ்டு 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஒவ்வொரு நகர்வும், ஆளுங்கட்சியான திமுகவுக்கு பேரிடியாக உள்ளது.

இதனால் ஆளும் திமுக சார்பில், விஜய் கட்சியின் பலம் குறித்து முழு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. விஜய்யின் நகர்வுகள் தமிழ்நாட்டு மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன? விஜய்க்கு இப்போது தமிழக மக்களிடம் எத்தனை சதவிகித ஆதரவு இருக்கிறது? இதுபோன்ற கேவிகளோடு, ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிரத்யேக சர்வே ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இந்த அவசர சர்வேயில் தற்போதைய நிலவரப்படி விஜய்க்கு மாநிலத்தில் 10% வரை ஆதரவு இருப்பதாக கணக்கிடப்பட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெறும் விஜயின் முதல் மாநாடு, அதில் விஜய்யின் பேச்சு, அதைத் தாண்டி 2026 சட்டமன்றத் தேர்தலை அவர் அணுகும் விதம், கூட்டணியாக வருகிறாரா, தனித்து போட்டியிடுகிறாரா ஆகிய நிலைப்பாடுகளின் அடிப்படையில் அவரது செல்வாக்கில் மாறுபாடு ஏற்படலாம் என்றும் அந்த சர்வேயில் அப்சர்வேஷன் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Read more ; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்..!! – பிரதமர் மோடி

Tags :
cm stalinDmktn governmenttvktvk vijay
Advertisement
Next Article