சர்க்கரை நோய், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 50% குறையும்... இன்றே இதை செய்ய தொடங்குங்க..
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, சத்தான உணவை உட்கொள்வதோடு, தினமும் யோகா, உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இருப்பினும், இந்த வேகமான வாழ்க்கையில், ஜிம்மிற்குச் செல்வது என்பது அனைவராலும் இயலாத காரியம். எனவே இந்த சூழ்நிலையில் நீங்கள் நடைபயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.
நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் எளிய மற்றும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகும். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதை நாம் அனைவரும் வழக்கமாக்கிக் கொண்டால், அது பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்று இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் 10 ஆயிரம் படிகள் நடக்கும் பழக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது என்று மருத்துவநிபுணர்கள் கூறுகின்றனர். இது நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தீவிரமான மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கும்.
தினமும் 10 ஆயிரம் அடிகள் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் 10 ஆயிரம் படிகள் நடப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல கடுமையான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடைபயிற்சியை உங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றினால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். இன்றிலிருந்தே ஸ்மார்ட்வாட்ச்சில் தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், அது உங்களுக்கு பயனளிக்கும்.
நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்
தொடர்ந்து நடைபயிற்சி செய்யும் பழக்கம் நுரையீரல் திறனை மேம்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும், ஒவ்வொரு சுவாசத்திலும் அதிக ஆக்ஸிஜனை எடுக்க அனுமதிக்கிறது. இதய நுரையீரல் மறுவாழ்வு மற்றும் தடுப்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நடைபயிற்சி சுவாச தசைகளை பலப்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது உடல் செயல்பாடுகளின் போது சிறந்த சகிப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இது ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதிலும், உடலில் ஆக்ஸிஜனின் சீரான ஓட்டத்தை பராமரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
இதய நோய்களின் அபத்து குறையும்
தினமும் 10,000 படிகள் நடப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். வழக்கமான நடைப் பழக்கம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுப்பதிலும் இந்தப் பழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 அடிகள் நடப்பது இதய நோய் அபாயத்தை 50% குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் குறையும்
நடைப் பழக்கம் உடலின் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது, டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. உண்மையில், இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது, இது நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது.
ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது நீரிழிவு நோயின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று டயபெடோலாஜியா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் 2,000 க்கும் மேற்பட்ட நபர்களை 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தனர். குறைவான சுறுசுறுப்பாக இருப்பவர்களை விட அதிகமாக நடப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 50% குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
Read More : குளிர்காலத்தில் காலையில் எழுந்தவுடன் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்..? தெரிஞ்சுக்க இதை படிங்க…