முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பதிவுத் துறையில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் 1,984 கோடி ரூபாய் வருவாய்...!

The revenue in the registration sector in November was an unprecedented Rs 1,984 crore.
06:51 AM Dec 07, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து பத்திரப் பதிவு துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 நவம்பர் மாதத்தைவிட கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக, மக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு டோக்கன் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது.இந்த டோக்கன்களை பயன்படுத்தி, கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத் துறை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags :
registrationRegistration DepartmentTamilnadutn governmentதமிழ்நாடு
Advertisement
Next Article