For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பை கிளப்பியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்? கடந்த தேர்தல் கணிப்புகள் சொல்வது என்ன?

05:40 AM Jun 03, 2024 IST | Baskar
பரபரப்பை கிளப்பியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்  கடந்த தேர்தல் கணிப்புகள் சொல்வது என்ன
Advertisement

2014, 2019ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகள் தேர்தல் முடிவுகளை சரியாக கணிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன.
இந்த கருத்து கணிப்புகளை சுட்டிக்காட்டி தேசிய ஜனநாயக கூட்டணி, தாங்கள் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி என கூறும் நிலையில், இந்தியா கூட்டணி, கருத்து கணிப்பு முடிவுகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனையொட்டி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகளை சரியாக கணிக்குமா என விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், கடந்த 2014, 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவு சரியாகவே இருந்துள்ளன என்பதுதான் நிதர்சமான உண்மை.

2014 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 முதல் 289 இடங்களை வெல்லும் எனவும், பாஜக மட்டும் 236 முதல் 249 தொகுதிகளில் வெல்லும் என கூறியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 101 முதல் 115 இடங்களை வெல்லும் எனவும், காங்கிரஸ் கட்சி மட்டும் 70 முதல் 78 இடங்கள் வரை வெல்லும் என தெரிவித்தது.

உண்மையில், தேசிய ஜனநாய கூட்டணி கணிக்கப்பட்டதை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. அக்கூட்டணி 336 இடங்களில் வென்ற நிலையில், பாஜக மட்டுமே 282 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 60 இடங்களை மட்டுமே வென்றது. கூட்டணிக்கு தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியோ வெறும் 44 இடங்களை மட்டுமே வென்றது.

2019 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணி 277 முதல் 306 இடங்கள் வரை வெல்லும் எனவும், பாஜக மட்டும் 250 முதல் 286 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் தெரிவித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 95 முதல் 120 இடங்கள் வரை வெல்லும் என கூறியது. காங்கிரஸ் மட்டும் 50 முதல் 64 இடங்களை வெல்லும் என்றது .
உண்மையில் தேசிய ஜனநாய கூட்டணி 352 இடங்களை வென்றது. அவற்றில் பாஜக மட்டுமே 303 தொகுதிகளை வென்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ, 93 இடங்களையே வென்றது. காங்கிரஸ் 52 இடங்களையும் பெற்றது.

2014ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பு முடிவுகள்:

தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்று, 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. மேலும் இந்தியா கூட்டணி 150க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஜூன் 4ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More: ‘வானத்தில் சீரமைக்கும் ஆறு கிரகங்கள்’ அரிய அண்ட நிகழ்வைக் காண உள்ள இந்திய நகரங்கள்!! எப்போது தெரியுமா?

Tags :
Advertisement