அடுத்த Twist: 2024 தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அதிமுகவிற்கு ஆதரவு...!
இந்திய குடியரசு கட்சி அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளில் 1 தொகுதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசு தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. தற்போது பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. அதிமுக கூட்டணி கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க கட்சியின் பொதுச் செயலாளரும் முடிவு செய்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது தொடர்பான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கிறது. அதே போல தமிழ்நாடு முத்தரையர் சங்கம் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் முத்தரையர் சமூகத்தின் வாக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளில் 1 தொகுதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசு தெரிவித்துள்ளார்.