முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஹோட்டலில் ஹேர் டிரையரால் பயன்படுத்தியதால் வந்த வினை..!! ரூ.1 லட்சம் அபராதம்..!!

02:38 PM Dec 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஆஸ்திரேலியாவின் `நோவோடெல் பெர்த் லாங்க்லி' என்ற ஹோட்டலில் கெல்லி என்ற பெண் தங்கியுள்ளார். அவர் தன்னுடன் எடுத்து வந்த ஹேர் டிரையர் (Hair Dryer) மூலமாக தலையை உலர்த்தி உள்ளார். அப்போது ஹேர் டிரையர், ஃபயர் அலாரமை (Fire Alarm) தூண்ட அலாரம் ஒலித்துள்ளது. அந்த இடத்திற்கு வேகமாக வந்த தீயணைப்பு குழுவினர், ஹேர் டிரையரால் அலாரம் ஒலிக்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து சென்று விட்டனர். இதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த கெல்லிக்கு அப்போது தான் பிரச்சனையே தொடங்கியுள்ளது.

Advertisement

3 நாட்களுக்குப் பிறகு கெல்லியின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1,10,000 குறைந்துள்ளது. பொய்யான ஃபயர் அலாரமை எழுப்பியதற்காக அபராதமாக அவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகை பிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையால் அமைக்கப்பட்ட பொய்யான அலாரங்களுக்கான அபராதத்தை விடக் கூடுதலாக வசூலித்துள்ளனர்.

இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக கொடுக்க கெல்லி தயாராக இல்லை. ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட கெல்லி, `இந்தக் கொள்கை நியாயமானதா' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் ஊடக கவனத்தைப் பெற்ற பிறகு, இறுதியாக அவரது பணம் அவருக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
அபராதம்ஆஸ்திரேலியாவங்கிக் கணக்குஹோட்டல்
Advertisement
Next Article