For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'செயல்பாடுகளை முடித்து கொண்ட 15 நிதி நிறுவனங்கள்..' - RBI தகவல்..!

03:45 PM May 14, 2024 IST | Mari Thangam
 செயல்பாடுகளை முடித்து கொண்ட 15 நிதி நிறுவனங்கள்      rbi தகவல்
Advertisement

இந்தியாவில் கிட்டத்தட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கான உரிமங்களை வழங்குவது, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது, ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அது குறித்து எச்சரித்து அதனை சரி செய்வது என்பன உள்ளிட்ட செயல்களை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது. இந்நிலையில், 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறி தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டாட்டா கேப்பிட்டல் பைனான்ஸ் சர்வீசஸ் உள்ளிட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதிவு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளன. இதில் 9 வங்கி சாராத நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேடிஎஸ் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், ஜோதானி மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் , ஏபிஆர்என் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், டாடா கேபிட்டல் ஃபைனான்ஸ் சர்வீசஸ் லிமிடெட் , டாடா க்ளீண்டெக் கேபிடல் லிமிடெட், நேபெரால் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் , யுஎஸ்ஜி ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் , உர்ஜா கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் , மற்றும் வந்தனா டீலர்ஸ் ஆகிய நிறுவனங்களும் உரிமங்களை ஒப்படைத்து விட்டன. இந்த ஒன்பது நிறுவனங்களும் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய உரிமங்களை ஒப்படைத்துவிட்டன.

மேலும், வியான் குரோத் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட், டிராப் லீசிங் அண்ட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜூவல் ஸ்டிரிப்ஸ் பிரைவேட் லிமிடெட் , ரிவால்விங் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட், அன்சு லீசிங் பிரைவேட் லிமிடெட், மற்றும் ஏவிபி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களும் நிதி வணிகத்தில் இருந்தே வெளியேறிவிட்டன.

Tags :
Advertisement