வேகமாக பரவும் கொடிய மார்பர்க் வைரஸ்!. 300 பேர் பாதிப்பு!. WHO எச்சரிக்கை!. அறிகுறிகள் இப்படிதான் இருக்கும்!
Marburg Virus: மார்பர்க் கடுமையான ஆபத்தான ரத்தக்கசிவு காய்ச்சல் என்று கூறப்படுகிறது. இந்த தொற்று மனிதனுக்கு பரவ ஆப்பிரிக்க பச்சை குரங்குகள் தான் காரணம் என்றும் உலகசுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.மேலும் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மலம் மற்றும் இரத்தம் போன்ற கழிவுகள் மூலம் மனிதனுக்கு பரவுகிறது.
அந்தவகையில், எபோலா போன்ற கொடிய Marburg வைரஸ், சமீபத்தில் ருவாண்டாவில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது, இதன் விளைவாக எட்டு பேர் இறந்தனர். மேலும் 300 பேர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு ஜெர்மனியில் மார்பர்க் மற்றும் பிராங்க்பேர்ட்டில் ஒரே நேரத்தில் இது கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் முதல் இரண்டும் எபோலா போன்றது. செனகல் ஆய்வகத்தால் சோதனை முடிவுகள் சரிபார்க்கப்பட்ட பின்பு கானாவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் 3வது நாளில் காணப்படும்.
அறிகுறிகள் தொடங்கியதில் இருந்து 5 - 7 நாட்களில் கடுமையான ரத்த கசிவு தோன்றலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், வைரஸ் உட்புற இரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கிறது, இது பெரும்பாலும் 9 நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவ சிகிச்சையின் திரிபு மற்றும் செயல்திறனைப் பொறுத்து இந்த வைரஸின் இறப்பு விகிதம் 24% முதல் 88% வரை இருக்கலாம்.
இந்தநிலையில், ருவாண்டாவில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகளைத் தனிமைப்படுத்தவும் மற்றும் சாத்தியமான தொடர்புகளைக் கண்டறியவும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எபோலாவுடனான அதன் ஒற்றுமைகள், அறிகுறிகள் மற்றும் பரவும் முறை ஆகிய இரண்டிலும், வெடிப்பு அதிகரிப்பதைத் தடுப்பதில் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் முக்கியமானவை.
இதுதொடர்பாக ருவாண்டாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 7 மாவட்டங்களில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், நாட்டின் முதல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் சுகாதாரப்பணியாளர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோயாளிகள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
தற்போது குறிப்பிட்ட வைரஸ்க்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை என்றும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் என்றும் ஆரம்ப கால சிகிச்சை பலனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.