இரயிலில் மிடில் பெர்த் உடைந்து பயணி உயிரிழந்த விவகாரம் ; ரயில்வே நிர்வாகம் கொடுத்த விளக்கம்!
கேரளாவின் எர்ணாகுளத்தில் ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்ததற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முதியவர் மரத்திகா அலிகான். இவர் வேலை விஷயமாக கடந்த வாரம் கேரள மாநிலம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறார். மரத்திகா அலிகானுக்கு ரயிலில் கீழ் இருக்கை (லோயர் பெர்த்) ஒதுக்கப்பட்டிருந்தது. இரவு உணவை முடித்துக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மரத்திகா அலிகான் படுத்து தூங்கி கொண்டிருந்தார்
அப்போது எதிர்பாராதாவிதமாக மரத்திகா அலிகான் படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தானது உடைந்து அவர் மேல் பயங்கரமாக விழுந்து இருக்கிறது. இதில் இவருக்கு கழுத்து எலும்புகள் உடைந்து நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ரயிலில் மிடில் பெர்த் விழுந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு கை கால்கள் முழுமையாக செயலிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே மீட்பு படையினர் மரத்திகா அலிகானை வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள கிங்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கழுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மரத்திகா அலிகான் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்பொழுது இது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி, விபத்து நடந்த ஸ்லீப்பர் கோச்சின் மிடில் பெர்த்தில் எந்தப் பழுதும் இல்லை. மிடில் பெர்த்தில் இருந்த பயணி சீட் செயினை சரியாக இணைக்காமல் விட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எர்ணாகுளம் விரைவு ரயிலின் S6 கோச்சின் 57 கீழ் பெர்த்தில் அலிகான் இருந்திருக்கிறார். அப்போது மிடில் பெர்த்தில் இருந்த பயணியின் டிக்கெட் அப்க்ரேட் ஆனதால் அவர் மூன்றாவது ஏசி கோச்சுக்கு மாறியுள்ளார். இதையறிந்த மிடில் பெர்த் பயணி அவசரத்தில் சீட்டின் சங்கிலியை சரியாகப் பொருத்தவில்லை; அப்படியே இறங்கி சென்றுள்ளார்” என்று கூறியுள்ளது.
Read more ; அதிர்ச்சி..!! தும்மும்போது திடீரென வெளியே வந்து விழுந்த குடல்..!! நடந்தது என்ன..?