For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புட்டு வைத்த அண்ணாமலை...! அமைச்சர் எ.வ.வேலு குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு ரூ.5,442.39 கோடி...!

06:59 AM Jan 31, 2024 IST | 1newsnationuser2
புட்டு வைத்த அண்ணாமலை     அமைச்சர் எ வ வேலு குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு ரூ 5 442 39 கோடி
Advertisement

அமைச்சர் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அவரது குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு மொத்தம் 5,442.39 கோடி ரூபாய் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; திருவண்ணாமலை மாவட்டத்தில், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,81,495 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,80,004 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,03,252 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 3,58,215 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, வழங்கப்பட்டுள்ளது. 4,07,252 விவசாயிகளுக்கு, PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், முத்ரா கடனுதவி 4,168 கோடி ரூபாய் என மத்திய அரசின் திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர் .

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரி கட்டிடங்களைத் திறக்க இரண்டு முறை வந்த முதலமைச்சர், மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ. வேலு பணம் சம்பாதிக்க, திமுக கூட்டங்களுக்கு செலவு செய்ய, தேர்தலின் போது மக்களுக்கு காசு கொடுக்க, புதிதாக ஒரு மருத்துவ கல்லூரியை திறந்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகிறது, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொடுத்த மருத்துவ கல்லூரிகளுக்கு ரிப்பன் வெட்டியதைத் தவிர, புதியதாக ஒரு அரசு மருத்துவ கல்லூரியைக் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவின் ATM எ.வ. வேலு. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அவரது குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு மொத்தம் 5,442.39 கோடி ரூபாய். வாக்களித்த மக்களுக்கோ இத்தனை ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக தங்கள் விளைநிலங்களை காக்க போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் நடவடிக்கையை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரை, வேளாண்துறையின் இயக்குனராக ஆக்கியுள்ளது திமுக. விவசாயி மீது குண்டாஸ் போட்டவர் இன்று விவசாயத்துறை இயக்குனர். சமீபத்தில் இப்படி தான் பொய் செய்திகள் பரப்பும் ஒருவருக்கு, சமூக நல்லிணக்கத்திற்கான விருது கொடுத்தது திமுக அரசு.

டாஸ்மாக் கடைகளில் வரும் வருமானத்தை நம்பித்தான் திமுக அரசு இருக்கிறது. திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளிலிருந்து 44% சாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால், மக்கள் பாதிப்படைவது குறித்து திமுகவுக்கு அக்கறை இல்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, விவசாயிகள் பலனடையும்படி கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என கூறினார்.

Tags :
Advertisement