For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய்க்கு இப்படி ஒரு நிலைமையா..? அடி மேல் அடி..!! என்ன செய்யப்போகிறார்..?

There is a problem with the party flag introduced by Tamil Nadu Victory Kazhagam President Vijay.
08:25 AM Aug 23, 2024 IST | Chella
விஜய்க்கு இப்படி ஒரு நிலைமையா    அடி மேல் அடி     என்ன செய்யப்போகிறார்
Advertisement

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள கட்சிக் கொடிக்கு சிக்கல் வந்துள்ளது.

Advertisement

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் மேலே, கீழே சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் அந்தக் கொடியில் உள்ளது. நடுவில் வாகை மலரும், அதை சுற்றி நட்சத்திரங்களும் வாகை மலர் பக்கவாட்டில் பிளிறும் இரு போர் யானைகளும் உள்ளது.

இந்நிலையில் தான், இந்தக் கொடிக்கு தற்போது சிக்கல் வந்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானதாகும். உடனடியாக தவெக கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும் மற்றும் வழக்கும் தொடுக்கப்படும் என தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் தவெக என தனது கட்சியை அறிமுகப்படுத்தி அதன் சுருக்கெழுத்தாக டிவிகே என பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆரம்ப காலத்திலேயே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தங்கள் கட்சியை அப்படித்தான் குறிப்பிட்டு வந்தோம் என சொல்லி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, விஜய் கட்சியின் இந்த யானை சின்னம் ஃபெவிகால் லோகோவை திருப்பி போட்டு விட்டார் எனவும், ஸ்பெயின் நாட்டு கொடியை காப்பி அடித்து விட்டார் எனவும் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே மீம்ஸ்களாக இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

Read More : ஆடுகளை வளர்த்து லட்சாதிபதி ஆகலாம்..!! அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..? ரூ.1 கோடி வரை..!!

Tags :
Advertisement