'மாணவர்களுக்கு வேத கணிதம் தேவை..' சர்ச்சையை கிளப்பிய பிரதமர்..!! வேத கணிதம் என்றால் என்ன?
சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவிகள் மத்தியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் ஆசிரியரை மரியாதை குறைவாக பேசியது தொடர்பான விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில் தொடர் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த விவகாரத்தின் சலசலப்புகள் ஒய்வதற்குள்.. பிரதமர் மோடி பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
டெல்லியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "கணிதப் பாடத்தில் சிரமப்படும் குழந்தைகளுக்கு 'வேத கணித நுட்பங்கள்' மூலம் எளிதில் கணிதத்தைக் கற்றுக் கொடுக்கலாம். கணிதம் பற்றிய மாணவர்களின் புரிதலை மேம்படுத்த புதுமையான கற்பித்தல் முறைகளுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த கருத்து பகுத்தறிவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கணித துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை கடந்த காலங்களில் படைத்திருக்கிறது. ஆனால், அதைவிட பெரிய சாதனைகளை இந்தியா தற்போது செய்திருக்கிறது. இதற்கு சந்திரயான் 3, ஆதித்யா எல்1 உள்ளிட்டவற்றை மேற்கோளாக காட்ட முடியும். இப்படி இருக்கையில், மீண்டும் வேத கணிதத்தை நோக்கி நகர்வது பிற்போக்கானது என்று விமர்சித்துள்ளனர்.
வேத கணிதம் என்றால் என்ன?
வேத கணிதம் என்பது கணிதச் சிக்கலை எளிதாகவும் வேகமாகவும் தீர்க்கும் நுட்பங்கள்/சூத்திரங்களின் தொகுப்பாகும். இது 16 சூத்திரங்கள் (சூத்திரங்கள்) மற்றும் 13 துணை சூத்திரங்கள் (துணை சூத்திரங்கள்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அவை எண்கணிதம், இயற்கணிதம், வடிவியல், கால்குலஸ் மற்றும் கூம்புகளில் உள்ள சிக்கல்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.
வேதம் என்பது சமஸ்கிருதச் சொல்லுக்கு 'அறிவு' என்று பொருள். வழக்கமான கணித படிகளைப் பயன்படுத்தி, சிக்கல்களைத் தீர்ப்பது சில நேரங்களில் சிக்கலானது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஆனால் வேதக் கணிதத்தின் பொது நுட்பங்கள் (கொடுக்கப்பட்ட தரவுகளின் அனைத்து தொகுப்புகளுக்கும் பொருந்தும்) மற்றும் குறிப்பிட்ட நுட்பங்கள் (குறிப்பிட்ட தரவுகளின் குறிப்பிட்ட தொகுப்புகளுக்கு பொருந்தும்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, எண் கணக்கீடுகளை மிக வேகமாகச் செய்ய முடியும்.
Read more ; மனைவி பெயரில் வீடு வாங்கினால் இத்தனை சலுகைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..