தொடர் மழையால் திடீரென உயர்ந்த காய்கறிகளின் விலை..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! பூண்டு விலை டாப்..!!
Rain | தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இதுவரை கனமழைக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இடி மின்னலின்போது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்தும் குறைந்து விலை அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே கிலோ பூண்டு ரூ.400, பீன்ஸ் ரூ.300, இஞ்சி ரூ.200, மிளகாய் ரூ.100, கேரட் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.80, பீட்ரூட் ரூ.76, சின்ன வெங்காயம் ரூ.76, பெரிய வெங்காயம் ரூ.40, கத்தரிக்காய் ரூ.75, முட்டைகோஸ் ரூ.50, முருங்கை ரூ.65, தக்காளி ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Read More: தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களில் 11 பேர் பலி..!! கனமழையால் நிகழ்ந்த சோகம்..!! மக்களே உஷார்..!!