For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிய காய்கறிகள் விலை..? இன்றைய நிலவரம் இதோ..!!

As the supply of vegetables including tomato, onion and carrot has increased in the Chennai Koyambedu market, the prices have also started to decrease.
09:24 AM Jun 28, 2024 IST | Chella
மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிய காய்கறிகள் விலை    இன்றைய நிலவரம் இதோ
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி, வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் குறைய தொடங்கியுள்ளது.

Advertisement

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரம் உச்சத்தில் இருந்த தக்காளி, ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய் கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. காலிஃப்ளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : உங்கள் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? மீண்டும் எப்படி அப்ளை செய்வது..?

Tags :
Advertisement