முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகிழ்ச்சி செய்தி...! உளுத்தம் பருப்பு விலை 4 சதவீதம் குறைவு...!

The price of urad dal has decreased by 4 percent
06:05 AM Jul 17, 2024 IST | Vignesh
Advertisement

உளுத்தம் பருப்பு மற்றும் கொண்டக்கடலை விலை 4% குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பருப்பு விலை நிலவரம் குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்திய சில்லறை வியாபாரிகள் சங்கத்தினருடன் நேற்று ஆலோசனை நடத்தியது. குறிப்பிட்ட வகை உணவுப் பொருட்களுக்கான உரிமத் தேவைகள், இருப்பு அளவு மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளை அகற்றுவது குறித்த, 21.06.2024 மற்றும் 11.07.2024 தேதியிட்ட உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள துவரம் பருப்பு மற்றும் கொண்டக்கடலை இருப்பு அளவுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Advertisement

கூட்டத்தில் பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி கரே, கடந்த ஒரு மாதத்தில் நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கொண்டக்கடலை விலை 4% குறைந்துள்ள போதிலும், இந்த விலைக் குறைப்பு சில்லறை விற்பனை விலையில் மாற்றம் இல்லை. மொத்த விற்பனை சந்தைகளின் விலைக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையே மாறுபட்ட நிலவரம் காணப்படுவது, சில்லறை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதையே எடுத்துக் காட்டுகிறது.

கரீப் பருவ பருப்பு சாகுபடி பெருமளவு மேற்கொள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதிக அளவில் பருப்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களில் துவரம்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் நிறுவனங்கள் வாயிலாக தரமான விதைகள் விநியோகிக்கப்படுவதாகவும், மற்ற தேவைகள் குறித்து மாநில வேளாண்மை துறைகளுடன் தொடர்ந்து, தொடர்பில் இருந்து வருவதாக கூறினார்.

Tags :
central govtDalDal price
Advertisement
Next Article