மீண்டும் மீண்டுமா.. ரூ.57 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!! - இல்லத்தரசிகள் ஷாக்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்துக் கொண்டே வந்தது. கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.59,080-க்கும் விற்பனை ஆனது. பின்னர், விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.55,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் கடந்த 4 தினங்களில் சவரனுக்கு ரூ 1680 அதிகரித்துள்ளது
சென்னையில் நவம்பர் 21-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 57,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,145 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read more ; மழைக்காலத்தில் குளிரை போக்க சரக்கு அடிக்கலாமா? – மருத்துவர்கள் விளக்கம் இதோ..